பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
கோத்தகிரி
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. இதற்கு நீலகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பூபதி தலைமை தாங்கினார். கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன், தலைமையிடத்து மண்டல துணை தாசில்தார் சுமதி, தலைமை நில அளவையர் குணசேகரன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு, தகுதி உடையவர்களுக்கு உடனடியாக பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இதேபோன்று தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story