சாலையை ஆக்கிரமித்த புதர் செடிகள்
கூடலூர்-ஓவேலி இடையே சாலையை ஆக்கிரமித்த புதர் செடிகளால் பள்ளி செல்லும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.
கூடலூர்
கூடலூர்-ஓவேலி இடையே சாலையை ஆக்கிரமித்த புதர் செடிகளால் பள்ளி செல்லும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.
புதர் செடிகள் ஆக்கிரமிப்பு
கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகள், மாவட்ட கல்வி அலுவலகம், மாணவ-மாணவிகளின் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் ஓவேலி பேரூராட்சிக்கு செல்லும் சாலை என்பதால் வாகன போக்குவரத்தும் அதிகளவில் நடைபெறுகிறது. குறிப்பாக பள்ளிகள் உள்ள பகுதி என்பதால், அந்த சாலையில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமான மாணவ-மாணவிகள் நடந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் சாலையின் இருபுறமும் புதர்கள் அடர்ந்து வளர்ந்து இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் சாலைகளை புதர்கள் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் பள்ளிகளுக்கு சென்று திரும்பும் மாணவ-மாணவிகள் சாலையின் நடுவில் நடந்து செல்லும் நிலை காணப்படுகிறது.
விபத்தில் சிக்கும் அபாயம்
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சாலையை ஆக்கிரமித்து புதர் செடிகள் வளர்ந்து உள்ளதால் பாதுகாப்பாக மாணவ-மாணவிகள் உள்பட பாதசாரிகள் நடந்து செல்லவும், வாகனங்களை இயக்கவும் திணறி வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும். மேலும் சாலையோரத்தில் நடந்து செல்ல தடுப்புகளுடன் கூடிய நடைபாதைகள் கட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story