இளம் கால்பந்து வீரர்கள் தேர்வு
இளம் கால்பந்து வீரர்கள் தேர்வு
கோத்தகிரி
இந்திய கால்பந்து கழகம், தமிழ்நாடு கால்பந்து கழகம் மற்றும் நீலகிரி கால்பந்து கழக வழிகாட்டுதலின்படி நீலகிரி மாவட்டத்தில் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்கும் நோக்கத்தில் கோத்தகிரியில் நீலகிரி கால்பந்து குழு(நீலகிரி எப்.சி.) செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 8 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட இளம் கால்பந்து வீரர்களை தேர்வு செய்யும் பணி கோத்தகிரி காந்தி மைதானம் மற்றும் கடைகம்பட்டி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு முறையான பயிற்சி, சீருடை, உபகரணங்கள் வழங்கி அவர்களை மாவட்ட, மாநில மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கிராமப்புறங்களில் 8 வயது, 10 வயது, 12 வயது, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐவர் கால்பந்து போட்டிகளை நடத்தி, சிறப்பாக விளையாடும் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.25 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story