சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை


சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
x
தினத்தந்தி 29 Oct 2021 9:31 PM IST (Updated: 29 Oct 2021 9:31 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின.

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகரில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று இரவு 7 மணிக்கு சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ரூ.11 ஆயிரத்து 850 மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த பணம் அங்குள்ள ரெக்கார்டு அறையில் ஆவணங்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே சார்பதிவாளர் சுல்தான் அலாவுதீன் மாலை 5 மணிக்கு களப்பணிக்கு சென்றவர் அதன்பிறகு அலுவலகத்திற்கு வரவில்லை.  அலுவலகத்தில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சார்பதிவாளரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. அவரது மோட்டார் சைக்கிள் அலுவலகத்திலேயே நிறுத்தப்பட்டு இருந்தது.
சார்பதிவாளர் அலுவலகத்தில் பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இரவில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினார்கள்.

Next Story