சத்துணவு அமைப்பாளரை கோடரியால் வெட்டி படுகொலை
நடத்தையில் சந்தேகம் அடைந்து சத்துணவு அமைப்பாளரை கோடரியால் வெட்டி படுகொலை செய்த கணவர் சரண் அடைந்தார்.
தொண்டி,
நடத்தையில் சந்தேகம் அடைந்து சத்துணவு அமைப்பாளரை கோடரியால் வெட்டி படுகொலை செய்த கணவர் சரண் அடைந்தார்.
டிரைவர்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, கடம்பூர் ஊராட்சி குருந்தங்குடி கிராமத்தை சேர்ந்த காசிலிங்கம் மகன் ரமேஷ் (வயது36). இவரது மனைவி சாந்தா (34). இவர்களுக்கு திருமணமாகி சுமார் 12 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் கடந்த சில வருடங்களாக சிங்கப்பூரில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.
சாந்தா சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி அருகே உள்ள ஆரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணி புரிந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் ரமேஷ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். சாந்தாவின் நடத்தையில் ரமேசிற்கு சந்தேகம் ஏற்பட்டு கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. அதனை தொடர்ந்து முக்கியஸ்தர்கள் மூலம் சமரச பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதில் சமரசம் ஏற்படாத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாந்தா தேவகோட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சமரசம் செய்து கணவன்-மனைவி 2 பேரையும் சேர்ந்து வாழ அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
சந்தேகம்
கடந்த சில தினங்களாக சாந்தா குருந்தங்குடி கிராமத்தில் உள்ள கணவர் ரமேசின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சாந்தாவின் மீது ரமேசிற்கு நாளுக்கு நாள் சந்தேகம் வலுத்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே சில தினங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்ததாக தெரியவருகிறது.
இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் மனைவி மீது ஆத்திரமடைந்த ரமேஷ் சாந்தாவை தாக்கியதுடன் வீட்டில் இருந்த கோடரியால் கழுத்தில் வெட்டி உள்ளார். இதில் சாந்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து இறந்தார். உடனே கோடரியை சாந்தாவின் பிரேதத்தின் அருகிலேயே போட்டு விட்டு கடம்பூர் குரூப் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று சரணடைந்த ரமேஷ் தனது மனைவியை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
விசாரணை
அதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் ரமேசை திருவாடானை போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தார். மேலும் இது தொடர்பாக அவர் புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருவாடானை போலீசார் சாந்தாவின் உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய கோடரியை கைப்பற்றியதுடன் இச் சம்பவம் குறித்து ராமேசிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
Related Tags :
Next Story