தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
ராமநாதபுரம்,
தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
உத்தரவு
வருகிற 4-ந்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொதுமக்கள் சிரமம் இன்றி பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்க அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய ஊர்களுக்கு வருகிற 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
முக்கிய நகரங்கள்
மேலும் திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதேபோல் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சென்னையில் இருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஊர் திரும்ப சிறப்பு பஸ்கள்
கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பஸ்கள், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்தும். கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பஸ்கள் கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட உள்ளது.
மேலும் தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல வருகிற 4 முதல் 8-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. இந்த தகவலை கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story