குந்தாரப்பள்ளி சந்தையில் ஒரு ஆடுரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை
குந்தாரப்பள்ளி சந்தையில் ஒரு ஆடுரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை
குருபரப்பள்ளி, அக்.30 -
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது.
ஆடுகள் விற்பனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை தினத்தில் கிராமப்புறங்களில் சுவாமிக்கு ஆடு, கோழிகள் பலியிட்டு வணங்குவது வழக்கம். பண்டிகையையொட்டி சந்தைகளில் ஆடுகள், கோழிகள் விற்பனை அதிகரித்து காணப்படும். அதன்படி நேற்று குந்தராப்பள்ளி கிராமத்தில் நடந்த வாரசந்தையில் வழக்கத்தை விட ஆடுகள், கோழிகள் விற்பனைஅதிகரித்து காணப்பட்டது.
ஆடுகளை விற்கவும், வாங்கி செல்லவும் விவசாயிகளும், வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக அளவில் திரண்டனர். குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் சந்தைக்கு வந்திருந்தனர்.
ரூ.5 கோடிக்குஆடுகள் விற்பனை
சந்தைக்கு சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. காலை 5 மணி முதலே ஆடு விற்பனை தொடங்கியது. கிலோவை பொறுத்து ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையாது. மொத்தம் ரூ.5 கோடிக்கு ஆடுகள் வர்த்தகம் நடந்துள்ளது.
வருகிற ஞாயிறு, செவ்வாய்க்கிழமை சந்தைகளில் ஆடுகள் விற்பனை அதிகரிக்கும் என்று விவசாயிகள் கூறினர். இதே போல் நாட்டுக்கோழிகள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது.
Related Tags :
Next Story