திருக்கோவிலூர் அருகே ரூ 5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருக்கோவிலூர் அருகே ரூ 5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருக்கோவிலூர்
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் கூட்டுரோடு பகுதியில் உள்ள வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதவெள்ளி தலைமையில் போலீசார் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 118 அட்டை பெட்டிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக திருக்கோவிலூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சதீஷ்(வயது 52), டி.தேவனூர் சண்முகநாதன் தெரு சையது சாகுல்அமீது மகன் ரியாசுதீன்(21), அப்துல் காதர்(27) மற்றும் சதீஷ்(30) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்துல் காதரை கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து கார், ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story