திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 29 Oct 2021 11:21 PM IST (Updated: 29 Oct 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு 4- ம் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தளி
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு 4- ம் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
திருமூர்த்தி அணை
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அணைக்கு வனப்பகுதியில் உள்ள ஆறுகள் ஓடைகள் நீர் வரத்தை அளிக்கின்றது. ஆனாலும் பற்றாக்குறை சமாளிப்பதற்காக பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
அதைத்தொடர்ந்து ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் 4 மண்டலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அத்துடன் சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தண்ணீர் திறப்பு
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் வனப்பகுதியில் மழை தீவிரம் அடைந்தது. ஆனால் திருமூர்த்திஅணைக்கு நீர்வரத்து ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. அதை தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 4-ம் மண்டல பாசனத்திற்கு 5சுற்றுகளாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதையடுத்து விவசாயிகள் மக்காச்சோளம், உளுந்து, காய்கறிகள் சாகுபடியில்ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பிட்ட இடைவெளியில் மழை பெய்து வந்ததால்பயிரிடும் நல்ல முறையில் வளர்ந்து வருகிறது.மூன்று சுற்றுகள் தண்ணீர் நிறைவடைந்து 4-ம் சுற்றுக்கு அணையில் தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. அணையின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் நேற்று முன்தினம் 4-ம் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story