ஊரக வளர்ச்சித்துறையினர் முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பினர்


ஊரக வளர்ச்சித்துறையினர் முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பினர்
x
தினத்தந்தி 29 Oct 2021 11:26 PM IST (Updated: 29 Oct 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரிஊரக வளர்ச்சித்துறையினர் முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பினர்

சிவகங்கை,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட கிளை சார்பில் ஊராட்சிகளில் பணியாற்றிவரும் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலமாக மாத ஊதியம் வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி முடித்த ஊராட்சி செயலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும்  உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே யூனியன் அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினர். இதைதொடர்ந்து 2-வது கட்டமாக முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி சிவகங்கை தலைமை தபால் அலுவலகம் முன்பு மாநில பொருளாளர் ரவி தலைமையில் கவன ஈர்ப்பு ஆா்ப்பாட்டம் நடந்தது.இதில் மாவட்டதலைவர் பாக்கியராஜ், மாவட்ட பொருளாளர் மாரிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்குமரன், நிர்வாகிகள் ரமேஷ், பெரியகருப்பன், மச்சக்காளை, ராமச்சந்திரன், மதனகோபால், குமார், சந்திரகாந்த், கார்த்திக், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பினர்.இதே கோரிக்கையை வலியுறுத்தி கல்லல் ஒன்றியத்தில் சங்க தலைவர் நாகராஜ் தலைமையில் செயலாளர் அழகுமுத்து, பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் 200-க்கும் மேற்பட்ட கடிதங்களை முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story