நெமிலி, பனப்பாக்கம் பேரூராட்சியில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


நெமிலி, பனப்பாக்கம் பேரூராட்சியில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 29 Oct 2021 11:27 PM IST (Updated: 29 Oct 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

நெமிலி மற்றும் பனப்பாக்கம் பேரூராட்சியில் 300கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 நெமிலி

நெமிலி மற்றும் பனப்பாக்கம் பேரூராட்சியில் 300கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் மற்றும் பனப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் குமார் ஆகியோர் தலைமையில் அந்தந்த பேரூராட்சி பணியாளர்களை உள்ளடக்கிய குழுவினர், நேற்று பேரூராட்சியில் அமைந்துள்ள வணிக வளாகங்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள் மற்றும் உணவகங்களில் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

ஆய்வின் போது நெமிலி பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட சுமார் 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்களும், பனப்பாக்கம் பேரூராட்சியில் சுமார் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

சீல் வைக்கப்படும் 

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அதற்கான டோக்கன் வழங்கப்பட்டு, இன்று (சனிக்கிழமை) நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

Next Story