தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குலுக்கல் முறையில் 3 பேருக்கு பரிசு


தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குலுக்கல் முறையில் 3 பேருக்கு பரிசு
x
தினத்தந்தி 29 Oct 2021 11:27 PM IST (Updated: 29 Oct 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

குலுக்கல் முறையில் 3 பேருக்கு பரிசு

திருப்பத்தூர்

திருப்பத்தூர கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கடந்த 23-ந் தேதி நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களில் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல் பரிசாக கலர் டி.வி.யும், 2-ம் பரிசாக மிக்சியும், 3-ம் பரிசாக கிரைண்டர் என 3 பேருக்கும் மற்றும் 3 நபர்களுக்கு டிபன் கேரியர்களை மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் வழங்கினார்.  

மாதனூர் ஒன்றியத்தை சேர்ந்த லோகநாதன் என்பவருக்கு முதல் பரிசும், நாட்டறம்பள்ளி பேரூராட்சியை சேர்ந்த கஸ்தூரி என்பவருக்கும் 2-வது பரிசும், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தை ஜெதிஸ்குப்தா என்பவரும் 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், மோகனகுமரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் சங்கரன், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் காமராஜ், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story