கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டம்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராமத்தில் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு இந்த ஆண்டுக்கான கரும்பு அரவை தொடங்க வலியுறுத்தி சர்க்கரை ஆலை அலுவலகம் எதிரே அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு தலைவர் அன்பழகன் தலைமையில், செயலாளர் கோபி, இணை பொறுப்பாளர்கள் யுவராஜ், சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் முதல் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
3-வது நாளாக நேற்றும் ஆவ்ப்பாட்டம் நடந்தது. அனுமதி வழங்கும் வரை அடுத்த கட்டமாக உண்ணாவிரதம் போராட்டம் நடத்த போவதாக அவர்கள் தெரிவித்தனர். அதன் பிறகு கூட்டுறவு சர்க்கரை ஆலை தனி அலுவலர் மணிமேகலையிடம் விரைவில் ஆலை அரவையை தொடங்க வேண்டும், நிலுவையில் உள்ள 6 மாத சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கினர்.
Related Tags :
Next Story