ஆம்பூர் அருகே நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்


ஆம்பூர் அருகே  நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்
x
தினத்தந்தி 29 Oct 2021 11:45 PM IST (Updated: 29 Oct 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வடகரை பகுதியில் உள்ள ஒரு கொட்டகையில் நாட்டுத்துப்பாக்கி கிடப்பதாக உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு கொட்டகையில் நாட்டுத் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story