குளித்தலை பகுதி ஊராட்சி பள்ளிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு குளித்தலை பகுதி ஊராட்சி பள்ளிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
குளித்தலை
பள்ளிகள் திறப்பு
கொரோனா நோய் பரவலால் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. இந்தநிலையில் வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து குளித்தலை நகரம் மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணி பெரும்பாலும் முடிவடைந்த நிலையில் உள்ளது. மேலும் பள்ளிக்கு வரவுள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் அவர்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர்வதற்காக வட்டம் மற்றும் கட்டம் போடும் பணிகள் மற்றும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் வழங்குவது போன்ற பல்வேறு பணிகள் இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் நடந்து வருகின்றன.
கலந்தாய்வு கூட்டம்
அதன்படி குளித்தலை அருகே உள்ள ஆதிநத்தம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை அனுப்புவது குறித்து பெற்றோர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு தலைமை வகித்த இப்பள்ளி தலைமை ஆசிரியை கீதா பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் பாதுகாப்புக்காக இருப்பதற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து பெற்றோர்களுக்கு விளக்கி கூறினார்.
பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்களிடம் அனுமதி கடிதம் இதில் பெறப்பட்டுள்ளது. இப்பள்ளியை போன்று குளித்தலை பகுதியிலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகளிலும் சிறப்பான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
======
Related Tags :
Next Story