வங்கியில் திடீர் தீ விபத்து


வங்கியில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 29 Oct 2021 6:51 PM GMT (Updated: 29 Oct 2021 6:51 PM GMT)

கிருஷ்ணராயபுரத்தில் வங்கியில் ஏற்பட்ட தீயை உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம்
வங்கியில் தீ விபத்து 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் அருகே பாரத ஸ்டேட் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் வங்கியை பணியாளர்கள் வந்து திறந்தனர். அப்போது வங்கி உள்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. 
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது வங்கியில் உள்ள ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து உடனடியாக தீயை அணைத்தனர். 
நாசம்
இந்த தீ விபத்தால் வங்கியில் மின் வயர்கள் எரிந்து நாசமாகியது. மேலும் சுவர்களும் கருப்பாக மாறியது. பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வங்கியில் மின் வயர்களை மாற்றி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் வங்கி செயல்பட ஒரிரு நாட்கள் ஆகும். 
எனவே அதுவரை வாடிக்கையாளர்கள் குளித்தலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்று தங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என வங்கி பணியாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாயனூர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story