சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்


சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 30 Oct 2021 12:36 AM IST (Updated: 30 Oct 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தோகைமலை
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொண்டமாங்கினம் ஊராட்சி, கவுண்டம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த முட்டைகள் அழுகிய நிலையில் இருப்பதாக புகார் வந்தது. இந்தநிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அந்த பள்ளியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அழுகியதாக சொல்லப்படும் சத்துணவு முட்டைகள் என்றைக்கு கொண்டுவரப்பட்டது, அதை யார் வாங்கி வைத்தது. வாங்கும்போதே அழுகிய நிலையில் இருந்ததா? என்பது குறித்து கேட்டறிந்தார். பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்குவதற்காக வரப்பட்டுள்ள முட்டைகளை சரிபார்த்து வாங்காமல் இருந்ததற்காகவும், பெறப்பட்ட முட்டைகளை ஒருவார காலம் ஆகியும் குழந்தைகளுக்கு முறையாக வழங்காமல் வைத்திருந்ததற்காகவும், தனது பணியில் அலட்சியத்துடன் இருந்ததாலும் சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தியை பணியிடை நீக்கம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், இது குறித்து கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப கலெக்டர் உத்தரவிட்டார்.




Next Story