அரசு அலுவலகங்களை சூழ்ந்த மழை நீர்


அரசு அலுவலகங்களை சூழ்ந்த மழை நீர்
x
தினத்தந்தி 30 Oct 2021 1:33 AM IST (Updated: 30 Oct 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கோர்ட்டு வளாகத்தில் அரசு அலுவலகங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருச்சி, அக்.30-
திருச்சி கோர்ட்டு வளாகத்தில் அரசு அலுவலகங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேகமாக பரவும் டெங்கு
திருச்சி மாநகரில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநகராட்சி ஆணையர் முஜூபுர் ரகுமான் உத்தரவின்பேரில், மாநகராட்சி பணியாளர்களால் டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் கொசு மருந்து மற்றும் கைத்தெளிப்பான் மூலம் `அபேட்' மருந்தும் தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் வீடுகளில் உள்ள உடைந்த பானை, சிரட்டை, தேங்காய் நெட்டு உள்ளிட்ட தேவையில்லாத அனைத்து பொருட்களும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
அபராதம் விதிப்பு
மேலும் காலியாக உள்ள தனியார் இடங்களில் மழைநீர் தேங்கி நின்றால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருச்சி மாநகரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆங்காங்கே பள்ளமான இடங்களில் குட்டை போல் தண்ணீர் தேங்கி உள்ளது. திருச்சி கோர்ட்டு வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களை சூழ்ந்து மழை நீர் தேங்கி கொசு உற்பத்தி மையமாக உருமாறி உள்ளது.
அரசு அலுவலகங்களை சூழ்ந்த மழைநீர்
திருச்சி கோர்ட்டு வளாகத்தின் பின்புறம் வணிகவரி அலுவலகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு மின் வாரிய பகிர்மான அலகு நிலையம், சார்நிலைக் கருவூலம் ஆகிய அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இந்த அரசு அலுவலகங்களில் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், அலுவலர்கள் அரசுப்பணி செய்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மழை நீர் வெளியேற வழி இல்லாததால் இந்த அலுவலகங்களுக்குச் செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து சேறும் சகதியுமாக உள்ளது.
இதனால் அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சகதியில் சிக்கி விபத்து ஏற்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
தொற்று நோய் பரவும் அபாயம்
அரசு அலுவலகங்களின் முன்பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளதால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. ரேஷன் கடையில் மண்எண்ணெய் வாங்க வருபவர்கள் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சாலையில் விபத்தில் சிக்கு கிறார்கள் ஏற்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளின் வாகனங்கள் சேற்றில் சிக்கி தவிக்கிறார்கள். கோர்ட்டு வளாகத்தில் உள்ள சாலை மற்றும் குண்டும் குழியுமான இடங்களை செப்பனிட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் பகிர்மான அலகில் குட்டைபோல மழை தண்ணீர தேங்கியுள்ளதால் கொசு உற்பத்தி கேந்திரமாக மாறி உள்ளது. அதன் அருகில் உள்ள சாலை சேறும் சகதியுமாகி உள்ளது. எனவே, விபத்து ஏற்படுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Next Story