2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் சுபாஷ் சந்திரபோஸ் தெருவை சேர்ந்தவர் ஐகோர்ட் ராஜா (வயது 46), நெல்லை பேட்டை எம்.ஜி.ஆர். நகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளபாண்டி மகன் சண்முகசுந்தரம் என்ற சுந்தர் (29). இவர்கள் 2 பேரும் நெல்லை, பேட்டை பகுதிகளில் கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்து வந்ததாக பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடும்படி, மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணனுக்கு, சட்டம் - ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், டவுன் உதவி கமிஷனர் விஜயகுமார், பேட்டை இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
போலீஸ் கமிஷனர் அதனை ஏற்று, ஐகோர்ட் ராஜா, சண்முகசுந்தரம் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு ஆணையை இன்ஸ்பெக்டர் ஹரிகரன், பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story