இளம் பெண்களை வைத்து விபசாரம்


இளம் பெண்களை வைத்து விபசாரம்
x
தினத்தந்தி 30 Oct 2021 1:37 AM IST (Updated: 30 Oct 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் வீட்டை வாடகைக்கு எடுத்து இளம் பெண்களை வைத்து விபசாரம் நடத்திய 2 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி, அக்.30-
திருச்சியில் வீட்டை வாடகைக்கு எடுத்து இளம் பெண்களை வைத்து விபசாரம் நடத்திய 2 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.
வீட்டில் விபசாரம்
திருச்சி உறையூர் காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 21). இவர் தேவர் காலனியில் உள்ள ஒரு வீட்டிற்கு ஏராளமானோர் வந்து செல்வதாகவும், தனக்கு அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதுபோல சந்தேகமாக உள்ளதாகவும் உறையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் தேவர் காலனியில் உள்ள சம்பூர்ணா இல்லத்தில் சோதனை நடத்தினர். சோதனையில் அங்கு வீடு வாடகைக்கு எடுத்து இளம் பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது.
2 புரோக்கர்கள் கைது
இதையடுத்து அங்கிருந்த தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்த 25 வயது இளம் பெண், 24 வயது இளம்பெண், மதுரை மேலூரை சேர்ந்த 21 வயது இளம்பெண் மற்றும் திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் என 4 அழகிகளை போலீசார் மீட்டனர்.
மேலும் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்களான திருச்சி ஆழ்வார்த்தோப்பு காயிதேமில்லத் நகரை சேர்ந்த ஷேக்அப்துல் காதர் (34), ஜீவாநகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த சையது முஸ்தபா (31) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட இளம்பெண்களை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story