திரிபுரா முஸ்லிம்கள் மீது தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்


திரிபுரா முஸ்லிம்கள் மீது தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Oct 2021 1:58 AM IST (Updated: 30 Oct 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

திரிபுரா முஸ்லிம்கள் மீது தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சி, அக்.30-
திரிபுராவில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து திருச்சி பாலக்கரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏர்போர்ட் மஜித் வரவேற்று பேசினார். இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் சபியுல்லா, திருவெறும்பூர் தொகுதி செயலாளர் சாகுல் ஹமீது இமாம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் எராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story