பயிர்க்கடன்கள் தள்ளுபடி ஆகாததால் விவசாயிகள் தவிப்பு


பயிர்க்கடன்கள் தள்ளுபடி ஆகாததால் விவசாயிகள் தவிப்பு
x
தினத்தந்தி 30 Oct 2021 2:09 AM IST (Updated: 30 Oct 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

பயிர்க்கடன்கள் தள்ளுபடி ஆகாததால் விவசாயிகள் தவிப்பு

திருச்சி, அக்.30-
வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. இந்தநிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி காட்டூர் வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட சில வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளில் சிலருக்கு பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக சான்றிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் இதில் 194 பேருக்கு பல்வேறு காரணங்களை கூறி பயிர்கடன் தள்ளுபடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் பலர் தவித்து வருவதாகவும், மேலும் இதை காரணம் காட்டி அவர்களுக்கு வங்கிகளில் மறுக்கடன் வழங்க மறுப்பதாகவும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் தியாகு உள்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அப்போது இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு சென்றனர்.

Next Story