பெட்டிக்கடையில் பட்டாசு விற்ற 2 பேர் கைது


பெட்டிக்கடையில் பட்டாசு விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Oct 2021 2:13 AM IST (Updated: 30 Oct 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் பெட்டிக்கடையில் பட்டாசு விற்ற 2 பேரை போலீசார் ைகது செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் ரிசர்வ் லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் மளிகை பொருட்களுடன் பட்டாசுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் அந்த கடையின் உரிமையாளர் ஞான சேகர் (வயது 49) என்பவரை கைது செய்தனர். இதேபோல் சப்- இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் அண்ணாகாலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (48) என்பவர் தனது மளிகை கடையில் பட்டாசு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் கடையில் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

Next Story