வேன் மோதி பால் வியாபாரி பலி
வேன் மோதி பால் வியாபாரி பலி
உப்பிலியபுரம், அக்.30-
உப்பிலியபுரம் அருகே உள்ள தம்மம்பட்டியை சேர்ந்த ஆகாஷ் (வயது 23), மங்கப்பட்டியை சேர்ந்த மணி என்கிற முருகையா (49). இவர்கள் இருவரும் பால் வியாபாரிகள் ஆவர். நேற்று அதிகாலையில் இருவரும் முருங்கப்பட்டியில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த பால்வேன் அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த முருகையா துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். ஆகாஷ் சிறுகாயங்களுடன் தப்பினார். இதற்கிடையில் நிற்காமல் சென்ற வேனை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் பாஸ்கர் (40) என்பவரை கைது செய்தார்.

Related Tags :
Next Story