வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 30 Oct 2021 2:18 AM IST (Updated: 30 Oct 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சிவகிரி:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் மதன்ராஜ் (வயது 23), காசிராஜன் மகன் மகேஷ் (19) உள்ளிட்டவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் ராஜசிங்கப்பேரி கண்மாயில் பழங்களில் நாட்டு வெடிகுண்டு வைத்து ஒரு காட்டுப்பன்றி, 3 புள்ளிமான்கள் ஆகியவற்றை வேட்டையாடினர். பின்னர் அவற்றின் இறைச்சியை கடத்த முயன்றனர்.
அப்போது அங்கு ரோந்து சென்ற வனத்துறையினர், மதன்ராஜ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி தென்காசி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான சிலரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் மதன்ராஜ், மகேஷ் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட வன அலுவலர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். இதனை ஏற்று மதன்ராஜ், மகேஷ் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு கலெக்டர் கோபாலசுந்தரராஜ் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கடிதத்தை தென்காசி சிறையில் போலீசார் வழங்கினர்.

Next Story