நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் திடீர் பள்ளம்
நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
நம்பியூர்
நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
திடீர் பள்ளம்
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். கடந்த 2 மாதத்துக்கு முன்பு பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் கரையில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். கரை உடைப்பு பணி முடிந்ததும் மீண்டும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வாய்க்காலில் செல்கிறது. இந்த நிலையில் நம்பியூர் அருகே உள்ள கூடக்கரை பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலின் கரையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.
மூடும் பணி
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதனிடையே கூடக்கரை ஊராட்சி தலைவர் சிவக்குமார் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களை திரட்டிக்கொண்டு வாய்க்கால் கரையில் திடீர் பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு சென்றார். இதைத்தொடர்ந்து டிராக்டர்கள் மூலம் மண் கொண்டு வரப்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளத்தை மூடும் பணியில் பொதுப்பணித்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
துரிதமாக செயல்பட்டதால் கீழ்பவானி கரையில் ஏற்பட இருந்த உடைப்பு தவிர்க்கப்பட்டதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story