8 தாசில்தார்கள் திடீர் மாற்றம
குமரி மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை கலெக்டர் அரவிந்த் பிறப்பித்துள்ளார். அவர்கள் விவரம் வருமாறு:-
உசூர் மேலாளர்- அகஸ்தீஸ்வரம் தாலுகா
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக உசூர் மேலாளராக (பொது) பணியாற்றி வந்தவர் கா.கண்ணன். இவர் நாகர்கோவில் முத்திரைகள் தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். அகஸ்தீஸ்வரம் தாலுகா தாசில்தாராக பணியாற்றி வந்த சுசீலா, கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் தேர்தல் பிரிவு அலுவலக தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.
கிள்ளியூர் தாலுகா தாசில்தாராக பணியாற்றி வந்த ஜூலியன் ஹீவர், நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கேபிள் டி.வி. தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். பத்மநாபபுரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக பணியாற்றி வந்த திருவாழி, கிள்ளியூர் தாலுகா தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரிவு- கேபிள் டி.வி.
இதேபோல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் பிரிவு அலுவலக தனி தாசில்தார் சேகர், அகஸ்தீஸ்வரம் தாலுகா தாசில்தாராகவும், கேபிள் டி.வி. தனி தாசில்தார் வெ.கண்ணன் கலெக்டர் அலுவலக உசூர் மேலாளராகவும் (பொது) மாற்றப்பட்டுள்ளனர்.
மார்த்தாண்டத்தில் உள்ள முத்திரைகள் அலுவலக தனி தாசில்தார் வினோத் பத்மநாபபுரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராகவும், நாகர்கோவில் முத்திரைகள் அலுவலக தனி தாசில்தார் ரவிச்சந்திரன், மார்த்தாண்டம் முத்திரைகள் அலுவலக தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
நிர்வாக காரணங்களுக்காக தாசில்தார்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story