‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 30 Oct 2021 4:00 AM IST (Updated: 30 Oct 2021 4:00 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குப்பைகள் அள்ளப்பட்டன
கிருஷ்ணகிரியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிட்டம்பட்டி சென்னை மேம்பாலம் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகில் குப்பைகள் மலை போல குவிந்து கிடந்தது. இதனை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து அந்த பகுதியில் திறந்த வெளியில் கொட்டப்பட்டு இருந்த குப்பைகள் அள்ளப்பட்டன. இந்த குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.
-ஜெயக்குமார், கிருஷ்ணகிரி.

சுகாதார வளாகம் கட்டப்பட்டது
சேலம் மாவட்டம் இடங்கணசாலை கிழக்கு புளியம்பட்டியில் அக்ரி முரளிதரன் தெரு பகுதியை சேர்ந்தவர்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டது. எனவே சுகாதார வளாகம் கட்டி கொடுக்க வேண்டும் என்று கடந்த 4-ந் தேதி ‘தினத்தந்தி’யில் புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து அந்த பகுதியில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-ஆர்.ரவிச்சந்திரன், இடங்கணசாலை, சேலம்.

மழைக்கு இடிந்த பள்ளிக்கூட கழிப்பறை
கிருஷ்ணகிரியில்- குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கம்மம்பள்ளி கிராமத்தில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கக் கூடிய இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைக்கு கழிப்பறை இடிந்து விழுந்தது. இதனால் மாணவ- மாணவிகள் கழிப்பறை இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த கழிப்பறையை உடனே கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன்ராம், கிருஷ்ணகிரி.
===
குண்டும், குழியுமாக மாறிய சாலை
கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு சந்தாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஹரிநகர் செல்லும் வழியில் சாலையானது குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அந்த பாதையை கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி.

நாமக்கல்- மோகனூர் சாலையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சிங்கிலிபட்டி கிராமம். அந்த பகுதியில் உள்ள சாலை கடந்த 15 ஆண்டுகளாக போடப்படாமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையை புதுப்பித்து கொடுக்க பலமுறை கோரிக்கை வைத்தும், மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. இந்த சாலையை உடனடியாக புதிதாக போட்டு, எங்களின் நீண்ட நாள் பிரச்சினையை தீர்த்து வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சா.விஜயன், சிங்கிலிபட்டி, நாமக்கல்.
===
சுற்றுசுவர் இல்லாத கிணறு
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலையில் குடியிருப்புகள் மற்றும் தொடக்கப்பள்ளி, கோவில்களுக்கு அருகே பெரியகிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு தரை மட்டத்தில் உள்ளது. சுற்றுசுவர் இல்லாததால் பொதுமக்கள், குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே அதிகாரிகள் பொதுக்களின் நலன் கருதி கிணறுக்கு சுற்றுசுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரங்கராஜ், கபிலர்மலை, நாமக்கல்.
==
குவிந்து கிடக்கும் குப்பைகள்
சேலம் நெடுஞ்சாலை நகர் வைகை தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இங்கு குப்பைத்தொட்டி இல்லாத காரணத்தால் மக்கள் திறந்த வெளியில் குப்பையை கொட்டுகின்றனர். தினசரி வரும் குப்பை வண்டியும் முறையாக வராத காரணத்தால் இங்கு சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து முறையாக குப்பைகளை அள்ளி அந்த இடத்தில் குப்பைத்தொட்டி வைக்க வேண்டும்.
-மதன்குமார், காசகாரனுர், சேலம்.
===
நோய் பரவும் அபாயம்
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தொளசம்பட்டி காந்திநகர் 2-வது வீதியில் சுமார் 50 வீடுகள் உள்ளன. இங்கு சாக்கடை நீர் நிரம்பி மக்கள் நடக்கும் பாதையில் வழிந்தோடுகிறது. அந்த வழியாக செல்லும் போது மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய உள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை நீர் கால்வாயில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 -ஊர்மக்கள், தொளசம்பட்டி, சேலம்.

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி சண்முகா நகர் மின்சார வாரியம் அலுவலகம் அருகில் மதுரை காளியம்மன் தெருவில் தார் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதியும் இல்லை. பல ஆண்டுகளாக இதே நிலை தான் உள்ளது. மழைக்காலங்களில் சாக்கடை நீருடன் மழைநீர் கலந்து விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லையும் அதிகரித்துவிட்டது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி சாக்கடை கால்வாய் மற்றும் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.முஹம்மது இஸ்மாயில், சண்முகா நகர், சேலம்.

சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை சன்னியாசிகுண்டு பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். அந்த பகுதியில் சரியான சாக்கடை கால்வாய் இல்லாததால் சாக்கடை நீர் தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறது. பல ஆண்டுகளாக இதேநிலை தான். இதனால் நோய்தொற்று பரவி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடிவடிக்கை எடுத்து சாக்கடைநீர் செல்ல வழிசெய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், சன்னியாசிகுண்டு, சேலம்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா வெங்கடசமுத்திரம் ஊராட்சி 11-வது வார்டில் 6 மாதங்களாக துப்புரவு பணி நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மழைக்காலம் என்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து துரப்புரவு பணிகளை விரைந்து முடிக்க செய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், வெங்கடசமுத்திரம், தர்மபுரி.
========
வீணாகும் குடிநீர்
சேலம் மாநகராட்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து அத்வைதா ஆசிரமம் சாலையில், விநாயகர் கோவில் தெரு பிரியும் இடத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் விரைந்து தண்ணீர் குழாயை சரிசெய்தால் தண்ணீர் வீணாகுவதை தடுத்துவிடலாம்.
-விஜயராஜசோழன், அத்வைதா ஆசிரமம் ரோடு, சேலம்.
===
ஆபத்தான குடிநீர் தொட்டி
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா கருக்கல்வாடி கிராமம் புகையிலைகாரன் தெருவில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த பழைய மேல்நிலை தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி கட்டவேண்டும் என்று பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை அகற்ற அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேசன், கருக்கல்வாடி, சேலம்.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் தாலுகா கெலவள்ளி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி நீண்ட நாட்களாக பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. இதற்கு மாற்றாக வேறு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியும் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. ஆனால் பழைய மேல்நீர்த்தேக்க தொட்டி இன்றுவரை இடிக்கப்படவில்லை. எனவே சாலையோரம் ஆபத்தான நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதனை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், கெலவள்ளி, தர்மபுரி.
===
பள்ளிக்கூட கட்டிடம் சீரமைக்கப்படுமா?
சேலம்  கோட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கட்டிடம் ஒன்று சிதலமடைந்து கான்கிரீட் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் திறந்தவெளியில்  வகுப்புகள் நடந்து வருகிறது. மாணவ-மாணவிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளிக்கூட கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.
-கே.தீபன், கிச்சிப்பாளையம், சேலம்.


Next Story