சேலத்தில் மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை


சேலத்தில் மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
x
தினத்தந்தி 30 Oct 2021 4:37 AM IST (Updated: 30 Oct 2021 4:37 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.

சேலம்:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இதை முன்னிட்டு தமிழகத்தில் சில அரசு அலுவலகங்களில் தீபாவளி வசூல் நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதை தடுப்பதற்காக நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், தீயணைப்பு நிலையங்கள் உள்ளிட்ட பல அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
சேலம் 5 ரோடு பகுதியில் சேலம் மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த அலுவலகத்துக்கு நேற்று மாலை 6.30 மணி அளவில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் திடீரென சென்றனர்.
பின்னர் போலீசார் அங்கு தீவிர சோதனை நடத்தினர். மேலும் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை இரவு 9.20 மணிக்கு முடிவடைந்தது. இதில் பணம், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Next Story