தாம்பரம் ரெயில் நிலையம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை கோரிக்கை


தாம்பரம் ரெயில் நிலையம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை கோரிக்கை
x
தினத்தந்தி 30 Oct 2021 8:17 AM IST (Updated: 30 Oct 2021 8:17 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் ரெயில் நிலையம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவி சுவேதாவின் தந்தை மதியழகன், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

சென்னை குரோம்பேட்டை பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 58). இவருடைய மகள் சுவேதா (20). கல்லூரி மாணவியான இவர், கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி அன்று தாம்பரம் ரெயில் நிலையம் அருகில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் ராமு என்ற ராமச்சந்திரனை கைது செய்தனர். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை, சென்னை சேலையூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட மாணவி சுவேதாவின் தந்தை மதியழகன், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

எனது மகள் சுவேதா, குற்றவாளியால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். எனவே இந்த வழக்கை முறையாக விசாரித்து கோர்ட்டில் சரியான சாட்சி ஆவணங்களை தாக்கல் செய்து குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வாங்கித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகளின் சாவுக்கு முறையான நீதி கிடைக்க சரியான நடவடிக்கை எடுக்க வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story