வீட்டை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்
கூடலூர் அருகே வீட்டை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
கூடலூர்
கூடலூர் அருகே வீட்டை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
குட்டியுடன் காட்டுயானைகள்
கூடலூர் அருகே தேவாலா, நாடுகாணி ஆகிய பகுதிகளில் அட்டகாசம் செய்த காட்டுயானைகள் கேரள வனப்பகுதியில் இருந்து திரும்பி வந்து உள்ளன. அவை மீண்டும் வீடுகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் பாடந்தொரை அருகே 3-ம் மைல் பகுதிக்குள் குட்டியுடன் காட்டுயானைகள் நுழைந்தன. பின்னர் வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தின. தொடர்ந்து கிறிஸ்டோபர் என்ற தொழிலாளியின் ஆஸ்பெட்டாஸ் சீட் பொருத்தப்பட்ட வீட்டை உடைத்தன.
உயிர் தப்பிய தொழிலாளி
அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த அவர் பயத்தில் அலறி அடித்து பின்வாசல் வழியாக வெளியே ஓடி உயிர் தப்பித்தார். நேற்று அதிகாலை வரை காட்டுயானைகள் அந்த பகுதியில் முகாமிட்டு இருந்தன. அதன்பிறகு அங்குள்ள அம்மன் கோவிலில் ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. இதனால் காட்டுயானைகள் அங்கிருந்து தனியார் தேயிலை தோட்டம் வழியாக இடம்பெயர்ந்து சென்றன.
அதன் பின்னரே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதேபோன்று பிதிர்காடு அருகே கல்லேரி, ஆனையப்பன் சோலை ஆகிய பகுதிகளுக்குள் நேற்று முன்தினம் இரவு காட்டுயானை புகுந்தது. தொடர்ந்து பயிர்களை நாசம் செய்தது.
Related Tags :
Next Story