கோபால்பட்டி வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை தீவிரம்


கோபால்பட்டி வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை தீவிரம்
x
தினத்தந்தி 30 Oct 2021 9:39 PM IST (Updated: 30 Oct 2021 9:39 PM IST)
t-max-icont-min-icon

கோபால்பட்டி வாரச்சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழி விற்பனை தீவிரமாக நடைபெற்றது.

கோபால்பட்டி:
கோபால்பட்டியில் சனிக்கிழமைதோறும் ஆடு, கோழி விற்பனை சந்தை நடைபெறுவது வழக்கம். அப்போது நத்தம், அய்யலூர், செம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் ஆடு, கோழிகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். 
இந்தநிலையில் கோபால்பட்டியில் நேற்று வழக்கம்போல் வாரச்சந்தை நடைபெற்றது. அப்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். அதேபோல் ஆடு, கோழிகளும் விற்பனைக்காக அதிக அளவில் கொண்டு வரப்பட்டன. இதில், 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது. நாட்டுக்கோழி கிலோ ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டது. வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு ஆடு, கோழி விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோபால்பட்டி சந்தையில் ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை ஆடு, கோழிகள் விற்பனை ஆனது என்றனர்.

Next Story