தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சகதிகாடாக மாறிய சாலை
திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து கிராமம் காலனி தெருவில் தார்சாலை அமைக்கப்படவில்லை. மண்பாதையாகவே உள்ளது. மழைக்காலங்களில் இந்த பாதை சகதிக்காடாக மாறிவிடும். அந்த வகையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக தற்போது அந்த பாதை சகதிகாடாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜசேகர், தோட்டனூத்து.
வீணாகும் குடிநீர்
பெரியகுளம் தாலுகா ஜெயமங்கலம் கிராமத்தில் வைகை அணை சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீர் வெளியேறி வீணாக சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருமுருகன், ஜெயமங்கலம்.
ஆக்கிரமிப்பால் சுருங்கிய சாலை
பழனியை அடுத்த பாளையம் 28-வது வார்டு பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்பால் சுருங்கிவிட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், பழனி.
சேதமடைந்த குழாய் சீரமைக்கப்படுமா?
உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் 8-வது வார்டு அண்ணாமலை தெருவில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் முறையாக கிடைப்பதில்லை. எனவே குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிக்குமார், சின்னமனூர்.
குண்டும், குழியுமான சாலை
தேனி அரண்மனைபுதூர் காளியம்மன் கிழக்கு தெருவில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுப்பதற்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டது. பின்னர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டதும், அந்த குழிகள் முறையாக மூடப்படவில்லை. இதனால் தற்போது அந்த சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வேந்திரன், தேனி.
வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
திண்டுக்கல் நாகல்நகரில் மெங்கில்ஸ் ரோட்டில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலை, பஸ் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் சாலை ஆகிய இடங்களில் சாலையோரத்தில் 2, 3 சக்கர வாகனங்களை நிறுத்திச்செல்கின்றனர். இதனால் அந்த சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பாலமுருகன், திண்டுக்கல்.
Related Tags :
Next Story