தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 30 Oct 2021 4:15 PM GMT (Updated: 30 Oct 2021 4:15 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து அம்பை செல்லும் மெயின் ரோட்டில் பொட்டல்புதூர் மேல பஸ் நிறுத்தத்தில் இருந்து கீழ பஸ் நிறுத்தம் வரை சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் திருக்குமரன் அனுப்பிய பதிவு செய்தியாக வெளியானது. இதன் எதிரொலியாக சாலை பணியாளர்கள் பழுதடைந்த சாலைைய உடனே சீரமைத்தனர். இதற்காக ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் 

நெல்லை மாவட்டம் அம்பை- ஆம்பூர் மெயின் ரோடு அய்யனார்குளம் விலக்கு அருகில் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இதன் அருகில் நீர்நிலை உள்ளதால், சுரங்கப்பாதையில் கசிவுநீர் எப்போதும் தேங்குகிறது. தற்போது பெய்த மழையில் சுரங்கப்பாதையில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால் வாகனங்களில் செல்லபவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீைர வடிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-ரமேஷ், அய்யனார்குளம்.

அடிப்படை வசதிகள் தேவை

நெல்லை அருகே நரசிங்கநல்லூர் விசுவநாதன் நகரில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அங்கு தெருக்கள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-முருகேசன், நரசிங்கநல்லூர்.

வாறுகால் தூர்வாரப்படுமா?

அம்பை கல்யாணி தியேட்டர் எதிரில் சாலையின் வடபுறத்தில் உள்ள வாறுகால் ஓடையில் அடைப்புகள் நிறைந்துள்ளன. இதனால் மழைநீர் வடிந்து செல்ல முடியாமல், கழிவுநீருடன் சேர்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆகவே, வாறுகால் ஓடையில் உள்ள அடைப்புகளை அகற்றி தூர்வாருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-வினோ, அம்பை.

காட்சி பொருளான குடிநீர் தொட்டி

திசையன்விளை- இட்டமொழி ரோடு பகுதியில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியின் மின் மோட்டார் கடந்த சில நாட்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும் அங்குள்ள வாசகசாலை தெரு, மோகனகாந்தி தெருவில் மழைநீர் வடியாமல் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. காட்சி பொருளான குடிநீர் தொட்டியின் மோட்டாரை பழுது பார்க்கவும், தெருக்களில் மழைநீரை வடிய வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-அல்பர்ட், திசையன்விளை.

குடிநீர் குழாயை சூழ்ந்த கழிவுநீர் 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை பஞ்சாயத்து தட்சிணாமூர்த்தி நகர் முதலாவது வலது தெருவில் தற்போது பெய்த மழை காரணமாக மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. அங்குள்ள தெருக்குழாயையும் கழிவுநீர் சூழ்ந்துள்ளது. எனவே அங்கு சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி, குடிநீர் குழாயை சூழ்ந்த கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-ஜமீன், புளியரை.

அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுமா?

கடையநல்லூர் நகரசபை 1-வது வார்டு குமந்தாபுரம் 8-வது தெருவில் சுமார் 50 வீடுகள் உள்ளன. இங்கு சாலை, வாறுகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. தற்போது பெய்த மழையில் அங்குள்ள குடியிருப்புகளைச் சுற்றிலும் ஏராளமான விஷப்பூச்சிகள் நடமாடுகின்றன. அங்கு போதிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முத்துசாமி, குமந்தாபுரம்.

போக்குவரத்துக்கு இடையூறான மாடுகள் 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மெயின் பஜார்- திசையன்விளை ரோடு பகுதியில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. வாகன போக்குவரத்து நிறைந்த இந்த சாலையின் குறுக்காக அடிக்கடி மாடுகள் செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சாலையில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீராம், உடன்குடி

பழுதடைந்த சாலை

சாத்தான்குளம் அருகே கருங்கடல் பஞ்சாயத்தில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் சேதமடைந்த சாலைகளை பின்னர் புதுப்பிக்கவில்லை. தற்போது பெய்த மழையில் அங்கு சேறும் சகதியுமாக கிடப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் நெல்லை- சாத்தான்குளம் மெயின் ரோட்டில் பேய்க்குளம், செட்டிக்குளம் அருகில் சாலை உருக்குலைந்து குண்டும் குழியுமாக உள்ளது. எனவே, பழுதடைந்த சாலைகளை சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-இம்மானுவேல், கருங்கடல்.

Next Story