நாமக்கல் மாவட்டத்தில் 7-ம் கட்ட சிறப்பு முகாம்: 30 ஆயிரத்து 204 பேருக்கு கொரோனா தடுப்பூசி கலெக்டர் பார்வையிட்டார்


நாமக்கல் மாவட்டத்தில் 7-ம் கட்ட சிறப்பு முகாம்: 30 ஆயிரத்து 204 பேருக்கு கொரோனா தடுப்பூசி கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 30 Oct 2021 9:46 PM IST (Updated: 30 Oct 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் 7-ம் கட்ட சிறப்பு முகாம்: 30 ஆயிரத்து 204 பேருக்கு கொரோனா தடுப்பூசி கலெக்டர் பார்வையிட்டார்

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 7-ம் கட்டமாக நடைபெற்ற கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாமில் 30 ஆயிரத்து 204 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த முகாமை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டார்.
மெகா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்த 6 மெகா தடுப்பூசி முகாம்களில் 3 லட்சத்து 18 ஆயிரத்து 523 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். நேற்று 7-ம் கட்டமாக அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 750 முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த முகாம் பணிகளில் 210 டாக்டர்கள், 430 செவிலியர்கள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1,400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி செவிலியர்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 1,400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
கலெக்டர் பார்வையிட்டார்
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் களங்காணி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, கண்ணூர்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்வதை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டார். பின்னர் களங்காணி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், வனிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 7-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 30 ஆயிரத்து 204 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story