தர்மபுரியில் மனைவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது
தர்மபுரியில் மனைவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி:
தர்மபுரி இலக்கியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). அரசு பள்ளி ஆசிரியர். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். நேற்று செந்தில்குமார் தனது மனைவியிடம் தேதி என்ன? என்று கேட்டுள்ளார். அப்போது அவர் தேதியை தவறாக சொன்னதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் மனைவியை தாக்கி கத்தியால் குத்தினார். மகாலட்சுமியின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். காயமடைந்த அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். மனைவியை கத்தியால் குத்திய சம்பவத்தில் அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story