மொரப்பூர் அருகே ஆசிரியையிடம் தங்க சங்கிலியை திருடிய வாலிபர் கைது
மொரப்பூர் அருகே ஆசிரியையிடம் தங்க சங்கிலியை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள சென்னம்பட்டி கிராமத்தை பிரியங்கா (வயது 27). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 26-ந்தேதி சென்னம்பட்டியில் பிரியங்கா பெற்றோர் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பரிகார பூஜை செய்வதாக கூறி பூஜை அறையில் வைத்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை திருடிச்சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் மொரப்பூர் பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமாக இருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபுரம் பூமாலை நகரை சேர்ந்தார் ஆறுமுகம் மகன் சத்தியராஜ் (23) என்பதும், ஆசிரியையிடம் செய்வினைக்கு பரிகார பூஜை செய்வதாக கூறி தங்க சங்கிலியை திருடி சென்றவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story