தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பெரியகுளம், கம்பத்தில் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
பெரியகுளம்:
ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியையொட்டி, பெரியகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்-அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சையதுகான், ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, நகர செயலாளர் ராதா, துணை செயலாளர் அப்துல் சமது, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நாராயணன், நகர கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அன்பு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் சிவக்குமார், முன்னாள் அரசு வக்கீல் வெள்ளைச்சாமி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தேவர் சிலை திறப்பு
கம்பம் வடக்கு போலீஸ் நிலையம் அருகே பசும்பொன் முத்துராமலிங்கதேவர் ெஜயந்தியையொட்டி முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலை மற்றும் நூலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு பிரமலை கள்ளர் சமுதாய தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஓ.ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கி சிலையை திறந்து வைத்தார்.
இதில் சிலை பராமரிப்பு குழு தலைவர் ஓ.ஆர்.குமரேசன், செயலாளர் வக்கீல் துரைநெப்போலியன், விழாக்குழுவினர் சுருளிநாதன், மலைச்சாமி, வீரபாண்டியன், அன்பழகன், வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தங்கதமிழ்செல்வன் மரியாதை
விழாவில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவரும், பால முத்தழகு குழுமத்தின் தலைவருமான பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதேபோல் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, ம.தி.மு.க. மாவட்டசெயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், அனைத்து சமுதாய தலைவர்கள் திரளாக கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில், அனைத்து சமுதாய தலைவர்கள் இணைந்து மரக்கன்று நடவு செய்தனர். விழாவையொட்டி உத்தமபாளையம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
Related Tags :
Next Story