வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம்


வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 30 Oct 2021 10:41 PM IST (Updated: 30 Oct 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

நாளை 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதால் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்தது.

காரைக்குடி,

கொரோனா ெதாற்று குறைந்ததை தொடர்ந்து நாளை(திங்கட்கிழமை) 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதைெயாட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணி நேற்று முதல் தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 1½ ஆண்டுகளாக வகுப்பறைகள் பயன்படுத்தாததால் வகுப்பறை முழுவதும் தூசி படர்ந்த நிலையிலும், சுவர்கள் சுத்தமற்ற நிலையிலும் இருந்தது. இதையடுத்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேற்று பள்ளிக்கு வந்து பணியாளர்களை கொண்டு மாணவர்களின் வகுப்பறை, பள்ளி வளாகம், கழிப்பறை, தலைமையாசிரியர் அறை, ஆசிரியர்களின் அறை உள்ளிட்டவைகளை தண்ணீர் மூலம் சுத்தம் செய்யும் பணியை முடுக்கி விட்டனர். காரைக்குடி பகுதியில் உள்ள ராமநாதன் செட்டியார் தொடக்க பள்ளியில் நேற்று பள்ளி பணியாளர்கள் வகுப்பறை, மாணவர்களின் கழிப்பறை உள்ளிட்டவைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் பள்ளி முகப்பு பகுதியில் மாணவர்களின் வருகை குறித்து எழுதும் பணியும் நடைபெற்றது.


Next Story