மேலும் 69 பேருக்கு கொரோனா


மேலும் 69 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 Oct 2021 10:43 PM IST (Updated: 30 Oct 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

மேலும் 69 பேருக்கு கொரோனா

திருப்பூர், 
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 1,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் தொற்றால் 69 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 336-ஆக உள்ளது.
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 51 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 630-ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 728 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே நேற்று கொரோனாவுக்கு பலி இல்லை. இதனால் பலி எண்ணிக்கை 978-ஆக உள்ளது. 

Next Story