1,326 பயனாளிகளுக்கு ரூ.82¼ கோடி கடனுதவி


1,326 பயனாளிகளுக்கு ரூ.82¼ கோடி கடனுதவி
x
தினத்தந்தி 30 Oct 2021 10:47 PM IST (Updated: 30 Oct 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாமில் 1,326 பயனாளிகளுக்கு ரூ.82¼ கோடி கடனுதவியை கலெக்டர் முரளிதரன் வழங்கினார்.

தேனி:

தேனி மாவட்ட அளவிலான வங்கிகள் கூட்டமைப்பின் சார்பில் வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம், தேனி அருகே அன்னஞ்சி விலக்கில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. முகாமில், அனைத்து பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் சார்பில் விவசாய கடன், சிறு, குறு தொழில்கடன், வீட்டுக்கடன், வாகன கடன், முத்ரா கடன், கல்விக்கடன் மற்றும் மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களான ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு, ஓய்வூதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. 

இந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டார். பின்னர் நடந்த விழாவில் பல்வேறு கடன் வழங்கும் திட்டங்களின் கீழ் 1,326 பயனாளிகளுக்கு ரூ.82 கோடியே 32 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை கலெக்டர் முரளிதரன் வழங்கி பேசினார். 


முகாமில் மதுரை மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி துணை பொது மேலாளர் பிரதீப், கனரா வங்கி மண்டல மேலாளர் மெய்யப்பன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பாத்திமா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் அனுப், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அகிலன், கனரா வங்கி உதவி பொது மேலாளர் தாமோதரன், நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் சசிகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story