வடமாநில தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்


வடமாநில தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 30 Oct 2021 10:59 PM IST (Updated: 30 Oct 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

வடமாநில தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் வசித்து வரும் திருப்பூரில் இந்த பணிகள் மற்ற மாவட்டங்களை விட கூடுதலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 
இந்த முகாம்களில் பலரும் உற்சாகமாக தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். இருப்பினும் வடமாநில தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில், திருப்பூர் ரெயில் நிலையத்தில் வந்து இறங்குகிறவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுபோல் அந்த தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது. 

Next Story