தூத்துக்குடியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் செல்வநாயகபுரம், குறிஞ்சி நகர், தனசேகரன் நகர், பால்பாண்டி நகர், கட்டபொம்மன் நகர், போல்டன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த பகுதிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாநகரில் அதிகளவு மழை பெய்துள்ளதால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் மின்மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளதால் உடனடியாக மழைநீர் அகற்றப்படுகிறது. மாநகராட்சி கழிவுநீர் லாரிகள் மூலமாகவும் மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story