40 ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை


40 ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Oct 2021 11:01 PM IST (Updated: 30 Oct 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் 40 ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

தேனி: 
தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். மாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 2.30 மணி வரை நடந்தது. இந்த சோதனையின் போது நகராட்சி ஆணையாளர் சுப்பையா உள்பட 40 ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

 
சோதனையின் போது பெண் ஊழியர் ஒருவரிடம் சுமார் ரூ.35 ஆயிரம் இருந்தது. அதுகுறித்து விசாரித்த போது தனது நகையை வங்கியில் அடகு வைத்த பணம் என்று கூறினார். பின்னர் அதற்கான ரசீதை காண்பித்தார். இதையடுத்து அந்த பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதேபோல் மற்றொரு ஊழியரிடம் ரூ.5 ஆயிரம் இருந்தது. அதை அவர் ஏ.டி.எம். எந்திரத்தில் எடுத்து வந்ததாக கூறினார். இதுகுறித்து அவர் தனது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை காண்பித்தார். 

அந்த பணமும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சோதனையின் போது பணம், ஆவணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story