டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு


டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 Oct 2021 11:02 PM IST (Updated: 30 Oct 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்றதாக டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் ஜானகிபுரத்தில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாகவும், அரசு டாஸ்மாக் குடோனில் இருந்து கணக்கு காட்டாமல் கூடுதலாக மதுபான வகைகளை வாங்கி வந்து தனியார் குடோன்களில் பதுக்கி வைத்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து லாபம் ஈட்டுவதாகவும் எழுந்த புகாரின்பேரில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் அந்த 2 டாஸ்மாக் கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தினர்.
சுமார் 6 மணி நேரமாக நடந்த இந்த சோதனையின் முடிவில் கடந்த 3 நாட்களில் வசூலான கணக்கில் வராத ரூ.31,680 மற்றும் டாஸ்மாக் கடையில் இல்லாமல் சட்டவிரோதமாக தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.6 லட்சத்து 47 ஆயிரத்து 180 மதிப்புள்ள 7 ஆயிரம் மதுபாட்டில்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களான பார்த்தசாரதி, அய்யப்பன், விற்பனையாளர்கள் நாராயணன், முருகன் ஆகிய 4 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story