வாகனம் கவிழ்ந்து வாலிபர் சாவு


வாகனம் கவிழ்ந்து வாலிபர் சாவு
x
தினத்தந்தி 30 Oct 2021 11:09 PM IST (Updated: 30 Oct 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

வாகனம் கவிழ்ந்து வாலிபர் உயிரிழந்தார்.

பனைக்குளம், 
கமுதி பசும்பொன் கிராமத்திற்கு  மண்டபம் யூனியன் பெருங்குளம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த கருணாகரன் மகன் விக்னேஸ்வரன் (வயது21) மற்றும் அவரது நண்பர்களுடன் காரில் பெருங்குளத்தில் இருந்து நதிப் பாலம் பஸ் நிறுத்தத்தை கடந்து சென்றனர். அப்போது வாகனத்தின் வலதுபுறம் மற்றும் இடதுபுறம் சிலர் தொங்கிக்கொண்டு சென்றுள்ளனர். இதில் வாகனம் திடீரென கவிழ்ந்தது. அப்போது விக்னேஸ்வரன் படுகாயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இவருடன் வந்த நாகராஜ் என்பவரது மகன் மணிகண்டன் (20) என்பவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story