உளுந்தூர்பேட்டை அருகே ரேஷன் கடை சூறை வாலிபருக்கு வலைவீச்சு


உளுந்தூர்பேட்டை அருகே ரேஷன் கடை சூறை  வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Oct 2021 11:13 PM IST (Updated: 30 Oct 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே ரேஷன் கடை சூறை வாலிபருக்கு வலைவீச்சு

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு அதே பகுதியை சேர்ந்த சேட்டு மகன் வேலு என்பவர் ரேஷன் பொருட்கள் வாங்க வந்துள்ளார். அப்போது அவர் விற்பனையாளர் ராஜகோபாலிடம் கூடுதலாக துவரம்பருப்பு கேட்டதாகவும் ஆனால் அவரோ தர மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் வேலுவை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் ராஜகோபாலும் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் குடிபோதையில் அங்கு வந்த வேலு பூட்டியிருந்த ரேஷன் கடையின் கதவை அடித்து உடைத்து சூறையாடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விற்பனையாளர் ராஜகோபால் கொடுத்த புகாரின் பேரில் வேலுமீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து அவரை தேடி வருகிறார்கள். 


Next Story