போலீஸ் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி ெதாழிலாளி தற்கொலை முயற்சி

போலீஸ் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி ெதாழிலாளி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 30 Oct 2021 11:31 PM IST (Updated: 30 Oct 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

வாங்கிய கடனுக்கு 3 மடங்கு வட்டியை செலுத்தியும் கடனை அடைக்க முடியாத நிலையில் கடன் கொடுத்தவர் ஆபாசமாக திட்டியதால் மனமுடைந்த தொழிலாளி போலீஸ் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாணியம்பாடி

வட்டிக்கு பணம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் ஜமீர் (வயது 40). தொழிலாளி. இவர் உதயேந்திரம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வட்டிக்கு ரூ.80 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனுக்கு 2 வருடங்களாக கடன் தொகைக்கு 3 மடங்காக வட்டி மட்டுமே செலுத்தி உள்ளார்.
ஆனால் கடன் தொகையை திருப்பிக்கொடுக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து கடன் வாங்கியவரை ஜமீர் நேரில் சந்தித்து தற்போது பணம் கட்ட முடியாது என்று கூறியுள்ளார். 
தற்கொலை முயற்சி
ஆனால் கடன் கொடுத்தவர் அப்போது ஆபாசமான வார்த்தைகளால் ஜமீரை திட்டி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜமீர், வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையம் எதிரே பெட்ரோல் ஊற்றிகொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

தடுத்தனர்

போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கு வந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story