வாணியம்பாடியில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டருடன் கட்டிப்புரண்டு சண்டைபோட்ட தொழிலாளி


வாணியம்பாடியில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டருடன் கட்டிப்புரண்டு சண்டைபோட்ட தொழிலாளி
x
தினத்தந்தி 30 Oct 2021 11:38 PM IST (Updated: 30 Oct 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீஸ் சப்இன்ஸ்பெக்டருடன் கட்டிப்புரண்டு சண்டை போட்ட தொழிலாளியை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டிப்போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணியம்பாடி

வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீஸ் சப்இன்ஸ்பெக்டருடன் கட்டிப்புரண்டு சண்டை போட்ட தொழிலாளியை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டிப்போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செல்போனில் படம் பிடித்த தொழிலாளி

வாணியம்பாடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணா தலைமையில் போலீசார் நேற்று மாலை செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வாணியம்பாடியில் இருந்து சின்னவேப்பம்பட்டுவை நோக்கி மோட்டார்சைக்கிளில் ெசன்ற ஒருவர் நிறுத்தாமல் சென்றார்.

சிறிது தூரம் சென்ற அவர், மீண்டும் திரும்ப வந்து தனது மோட்டார்சைக்கிளின் ஆவணங்களை பரிசீலனைக்காக சப்-இன்ஸ்ெபக்டரிடம் கொடுத்து விட்டு, தனது செல்போனில் சப்-இன்ஸ்பெக்டரை படம் பிடித்துள்ளார். 

கட்டிப்புரண்டு சண்டை

அதற்கு சப்-இன்ஸ்பெக்டர், எதற்காக என்னை செல்போனில் படம் பிடிக்கிறாய், எனக் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அவர், தொடர்ந்து செல்போனில் படம் பிடிப்பதை சப்-இன்ஸ்பெக்டர் தடுத்துள்ளார். 

"அப்போது ெசல்ேபானை பிடுங்க முயன்ற சப்-இன்ஸ்ெபக்டரும், அவரும் ஒருவரை ஒருவர் கீழே தள்ளிக்கொண்டனர். திடீரென இருவரும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டைபோட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

சப்இன்ஸ்பெக்டரிடம் இருந்து தப்பியோட முயன்ற அவரை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து பிடித்து, ஒரு கம்பத்தில் கயிறால் கட்டிப்போட்டனர். அவரிடம் விசாரித்தபோது, சின்ன வேப்பம்பட்டுவைச் சேர்ந்த தொழிலாளி முரளிதரன் எனக் கூறினார்.
விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்

சம்பவ இடத்துக்கு போலீசார் வரவழைக்கப்பட்டு, அவரை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தேசிய நெடுஞ்சாலையையொட்டி நடந்த சம்பவத்தால் அங்கு ஏராளமான மக்கள் திரண்டனர்.

Next Story