ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்தது.
ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம், வேலம் அரசு உயர்நிலைப்பள்ளி, அரக்கோணம் சாலை கூட்ரோடு, குருவராஜப்பேட்டை சுந்தர விநாயகர் கோவில், அரக்கோணம் டவுன் ஹால், நெமிலி பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஓச்சேரி தொடக்கப்பள்ளி, காவேரிப்பாக்கம் பேரூராட்சி பஸ் நிலையம், வாலாஜா நகராட்சி பகுதிகளில் நடைபெற்ற முகாமினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது தடுப்பூசி பணியாளர்களிடம், முதல் தவணை, 2-வது தவணை தடுப்பூசி எவ்வளவு நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்ற விவரங்களையும், மாவட்டத்தில் இனி எவ்வளவு நபர்களுக்கு செலுத்தப்பட வேண்டும் என்ற விவரங்களையும் அமைச்சர் கேட்டறிந்தார்.
மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களிடம் முறையான பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், வாலாஜா ஒன்றிய குழுத்தலைவர் சே.வெங்கட்ரமணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story